காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னேற்ற அலுவலகம் மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான சிறப்பு கல்விக் கடன் முகாம் திருமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமின் முக்கிய நோக்கம், மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதற்கான அரசுத் திட்டங்கள் மற்றும் வங்கிகளின் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
இந்த நிகழ்ச்சியில் திரு. ஆர். காந்தி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலாளர் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொண்டார். மேலும் பல அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் மற்றும் கல்வி துறையினர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினர்.
மாணவர்கள் தங்களது கல்வியை முன்னேற்றிக்கொள்ள அரசு வழங்கும் கல்விக் கடன் திட்டங்களைப் பற்றி தெளிவான புரிதலை பெற்றனர். நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
🎓 திருமலை பொறியியல் கல்லூரி தொடர்ந்து மாணவர்களின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.










